தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ஸ்டாலினின் விமர்சனங்கள் மக்களிடம் எடுபடாது’ - விஜய பாஸ்கர் - ஸ்டாலினின் விமர்சனங்கள் மக்களிடம் எடுபடாது, விஜய பாஸ்கர்

புதுக்கோட்டை: மலிவான அரசியல் செய்து வரும் ஸ்டாலினின் விமர்சனங்கள் மக்களிடம் எடுபடாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார்.

விஜய பாஸ்கர்

By

Published : Nov 4, 2019, 7:20 PM IST

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேமோகிராம் என்று அழைக்கப்படும் மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர் கூறுகையில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தபடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மார்பக புற்றுநோய் கண்டறியும் கருவி அமைக்கப்படும் என்று அறிவித்ததன் கீழ் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று அக்கருவி பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.

விஜய பாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு

மேலும் பொதுமக்கள் மார்பக புற்றுநோய் தங்களுக்கு உள்ளதா என்பதை, 30 வயதை தாண்டிய பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மேமோகிராம் கருவி மூலம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

திமுக தலைவர் ஸ்டாலின் சுகாதாரத் துறையை விமர்சனம் செய்வதற்காகவே எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். எந்த ஒரு அடிப்படை ஆதாரமுமின்றி சுகாதாரத் துறையின் மீது ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகின்றார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மலிவான அரசியலை ஸ்டாலின் செய்து வருகிறார். அவருடைய விமர்சனம் பொதுமக்கள் மத்தியில் எடுபடாது, உண்மைநிலை பொது மக்களுக்கு தெரியும்" என்றார்.

இதையும் படிங்க: ‘வாரிசு இருந்தால்தான் அரசியலுக்கு வரமுடியும்’ - ஸ்டாலின் காட்டம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details