புதுக்கோட்டை அரசு பொது அலுவலக வளாகத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகமும் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தின் முன்பக்க கதவை பூட்டிக்கொண்டு சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறையினர், புதுக்கோட்டை, அறந்தாங்கி சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
மேலும் காவல் துறையினர் சோதனைக்கு வரும்போது அலுவலகத்தில் இருந்த பிற நபர்களிடமும் சோதனை நடத்தினர். சுமார். இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில், காவல் துறையினர் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க:
லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது!