புதுக்கோட்டை: இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கிடந்தது. இந்த சம்பவம் தேசிய அளவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பா இந்த சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
இது தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 75 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான யார் என்பது குறித்து கண்டுபிடிக்க முடியாததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து டிஎஸ்பி பால் பாண்டி தலைமையில் 35 சிபிசிஐடி போலீசார் கடந்த 16ஆம் தேதி விசாரணையைத் தொடங்கினர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் உள்ளிட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில், 10 தனிப்படைகள் விசாரணையை விரைவுப்படுத்தினர். கடந்த 23 நாட்களில், இதுவரை 90 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாகச் சந்தேகத்திற்குரிய வகையில், வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதி முத்தையா, முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் உட்பட 8 பேர் விசாரணைக்காகத் திருச்சி சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: அத்துமீறலுக்குள்ளாகும் நீர் தொட்டி: அன்று புதுக்கோட்டை.. இன்று விருதுநகர்... கைப்பற்றப்பட்ட நாயின் சடலம்!