புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் மருத்துவர்களுக்கு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் 100க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் சந்திரசேகர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். டெங்கு காய்ச்சலை முழுவதுமாக குணப்படுத்த முன்னேற்பாடுகளும் சில மருந்துகளும் இருக்கிறது. அதனை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால், உடனே மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகவும்" என்றார்.