புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா மேலவட்ட கிராம நிர்வாக அலுவலர் கட்டடம் பொன்னமராவதி காவல் நிலையம் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால் அக்கட்டடம் இது நாள் வரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.
இதனால் கட்டடமும் சேதம் அடைந்து வருகிறது. மேலும் பழைய கிராம நிர்வாக அலுவலக கட்டடம் பாழடைந்த கட்டடத்தின் மாடியில் செயல்படுவதால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் படிகள் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். பொன்னமராவதி காவல் நிலையம் அருகே சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை பயன்படுத்தாமல் மாடியில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை வருவாய்த்துறையினர் பயன்படுத்துவது ஏன்? என்பது பொதுமக்களுக்கு புரியாத புதிராக உள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட துறையினர் தலையிட்டு புதிய கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க : கிராமசபைக்கூட்டத்தில் நெகிழ்ச்சி; தூய்மைப்பணியாளர்கள் காலில் விழுந்த ஊராட்சித்தலைவர்