புதுக்கோட்டை: சென்னை மதுரை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த வேன் மோதி இன்று (டிச. 27) விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ்க்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதில் காயமடைந்த ஐந்து பேருக்கு கொடும்பாளூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக 50-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்.