புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க வந்த காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய அரசு அனைத்தையும் தனக்குள் வைத்துக்கொண்டு எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள் என அரசியல் பேசும் அனைவரையும் தீவிரவாதியாக விமர்சித்துவருகிறது. இது மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது.
தமிழ்நாடு மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால், அனைத்து அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு மக்களிடம் அனைத்தையும் திணிக்கப் பார்க்கின்றனர். பாஜக அரசு எந்த ஒரு தலைவரையும், அலுவலரையும் கலந்து உரையாடாமல் காஷ்மீர் விவகாரத்தைக் கையில் எடுத்துச் செயல்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், நேற்று ரஜினிகாந்த் புராணத்தை வைத்து அரசியல் பேசினார். ஆனால் அவர் புராணத்தைப் பேசிக் கொண்டிருக்காமல், சரித்திரத்தைப் படித்து அரசியலைக் கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும். காஷ்மீர் விவகாரம் குறித்து வைகோவின் விமர்சனம் நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று. மிகவும் வருத்தம் அளிக்கிறது. இருந்தாலும் எங்களுக்குள் விரிசல் எதுவும் இல்லை; சமரசமாகத்தான் இருக்கிறோம்.
வகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது அமைச்சரிடம் காவிரி குண்டாறு திட்டத்தை எப்போது செயல்படுத்தப் போகிறீர்கள் என்று கேட்டபோது அவர் எழுத்துப்பூர்வமாக எனக்குத் தந்த பதில் மிகவும் வருத்தமாக இருக்கிறது அதாவது முதலில் கோதாவரி, மகாநதி இணைப்பு திட்டத்திற்கு பிறகுதான் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பதிலளித்துள்ளார்” என்றார்.