புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் கருப்பர் மற்றும் பிடாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் உறுதிமொழி ஏற்றப்பிறகு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்ந்து நடைபெற்றது.
இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 காளைகள் பங்கேற்றன. அதே போன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வாடிவாசலில் சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் வீரர்களிடம் சிக்காமல் ஆட்டம் காட்டிய காளைகளுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.