தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிடம் ரூ.6.5 லட்சத்தை திருடிய இளைஞர்கள் - புதுக்கோட்டை பகீர் சம்பவம்! - புதுக்கோட்டையில் விவசாயிடம் வழிப்பறி

புதுக்கோட்டையில் விவசாயிடம் ரூ.6.5 லட்சம் பணத்தை பறித்துச் சென்ற இரு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

two
two

By

Published : Dec 11, 2022, 1:12 PM IST

புதுக்கோட்டை: கீரனூர் அருகே உள்ள தாயினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (54) என்ற விவசாயி, வீடு கட்டுவதற்காகத் தனியார் வங்கியிலிருந்து ஆறரை லட்சம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். இந்த தொகை அவரது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டதையடுத்து, பணத்தை எடுக்க கீரனூர் சென்றுள்ளார்.

வங்கியில் பணத்தை எடுத்துக் கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் குளத்தூர் என்ற இடத்தில் இறங்கி, கடைக்குச் சென்றார். அப்போது ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள், முருகனின் இருசக்கர வாகனத்தில் இருந்த பணப்பையை எடுத்துச் சென்றனர்.

இதைக் கண்ட முருகன் இருசக்கர வாகனத்தில் அவர்களை விரட்டிச் சென்றார். ஆனால், அவர்கள் புறவழிச்சாலை வழியாக தப்பிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக கீரனூர் போலீசாரிடம் முருகன் புகார் அளித்தார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பணத்தை திருடிச் சென்ற இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.

நகை, பணத்துடன் வெளியே செல்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என கீரனூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் செங்கோட்டு வேலவன் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 3 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 13 வயது சிறுவன்

ABOUT THE AUTHOR

...view details