தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கு: பெண் மந்திரவாதி கைது - Pudukkottai magician Vasanthi arrested

புதுக்கோட்டை: நரபலி கொடுப்பதற்காக 13 வயது சிறுமி கொலைசெய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த பெண் மந்திரவாதி, அவரது உதவியாளரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கு
புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கு

By

Published : Jun 4, 2020, 12:00 PM IST

கடந்த சில நாள்களுக்கு முன்பாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தைலமரக்காட்டில் தண்ணீர் எடுக்கச் சென்ற 13 வயது சிறுமி சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துகிடந்தார். இந்தக் கொலை சம்பவத்தில் திடீர் திருப்பமாக, "மூன்று மகள்களில் ஒருவரை நரபலி கொடுத்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்" என்று கூறிய மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு பெற்ற மகளையே தந்தை கொலைசெய்தது தெரியவந்தது.

இந்த வழக்குத் தொடர்பாக சிறுமியின் தந்தை பன்னீர்செல்வம், அவரது உறவினர் குமார் ஆகியோரைக் காவல் துறையினர் ஏற்கனவே கைதுசெய்தனர். இந்நிலையில் கொலைசெய்ய தூண்டுதலாக இருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் மந்திரவாதி வசந்தி, அவருக்குத் துணையாக இருந்த முருகாயி ஆகியோர் இன்று கைதுசெய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஐந்து பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் பன்னீர்செல்வத்தின் இரண்டாவது மனைவி மூக்காயி கடந்த 30ஆம் தேதி உயிரிழந்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க; ஆண் குழந்தை மோகம்: பெற்ற மகளை நரபலி கொடுத்துவிட்டு நாடகமாடியவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details