திருச்சி: திருச்சி சிப்காட் அருகேயுள்ள ரெங்கம்மாள் சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலே பலியானார். இரண்டு பேர் உயிருக்குப் போராடிய நிலையில், அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டையிலிருந்து துடையூர் அருகேயுள்ள தக்கிரிப்பட்டியைச் சேர்ந்த கீர்த்திவாசன்(40) என்பவர் மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியுள்ளது. இதில், கீர்த்திவாசன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.