புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த சொக்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 10 வயதிற்குள்பட்ட ஆறு சிறுவர்கள் அருகில் உள்ள அங்காள பரமேஸ்வரி பகுதியில் உள்ள அம்மன் கோயில் குளத்தில் குளிக்கச் சென்றனர்.
அக்குழந்தைகள் குளித்துக் கொண்டிருக்கையில் ஆழம் தெரியாமல் சேற்றுப் பகுதிக்குள் மாட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதில் நான்கு குழந்தைகள் உயிர் தப்பிய நிலையில் விக்னேஷ் (8), நிவேதா (10) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஊர் மக்களும் காவல் துறையினரும் இணைந்து குழந்தைகளை குளத்திலிருந்து மீட்டு அருகில் உள்ள வெள்ளாள விடுதி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
அதன் பின்பு இறந்துபோன இரண்டு குழந்தைகளையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக கொண்டுசென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க:ஒட்டன்சத்திரம் மாணவனின் முதல் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை