தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளத்தனமாக மது விற்பனை - 2 பேர் கைது; 99 மது பாட்டில்கள் பறிமுதல் - Illegal liquor seized

புதுக்கோட்டை: இலுப்பூர் பகுதியில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்ற இருவரை கலால் துறையினர் கைது செய்தனர்.

கள்ளத்தனமாக மது விற்பனை - 2 பேர் கைது

By

Published : Sep 10, 2019, 11:23 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சி பகுதிகளில் அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக கலால் துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து புதுக்கோட்டை உதவி ஆணையர் (கலால்) கார்த்திகேயன், கோட்ட கலால் அலுவலர் மனோகரன் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் சோனை முத்து ஆகியோர் இலுப்பூர் பேரூராட்சி பகுதிகளில் இன்று திடீரென ஆய்வு செய்தனர்.

அப்போது அந்தப் பகுதியிலுள்ள சௌராஷ்ட்ரா தெரு மற்றும் ஆர்.சி.பள்ளி அருகே அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனையில் ஈடுபட்டுகொண்டிருந்த குமார் (53) மற்றும் பொன்னுச்சாமி (42) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து விற்பனைக்காக அவர்கள் வைத்திருந்த 99 கள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் பின்னர் கைதானவர்கள் புதுக்கோட்டை மதுவிலக்கு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details