தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடல்வாழ் மண்புழுக்களை கடத்திய 12 பேர் கைது - banned earthworms

புதுக்கோட்டை: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள கடல் மண்புழுக்கள் கடத்தலில் ஈடுபட்ட 12 பேரை கடற்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடல்வாழ் மண்புழுக்களை சேகரித்த 12 பேர் கைது

By

Published : May 11, 2019, 4:44 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏனாதி கிராமத்திற்கு அருகே அரசால் தடை செய்யப்பட்ட கடல் மண்புழுவை சேகரித்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி திருப்புனவாசல் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகுபதி தலைமையில் காவலர்கள், அரசரை சோதனைச்சாவடி அருகே ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர்.

மண்புழுக்கள்

அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் அவ்வழியே வந்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் மண் புழுக்கள் இருந்தது. இதனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ரூ.20 ஆயிரம் மதிப்புடைய 10 கிலோ எடையில் மண்புழுக்கள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்து, சரக்கு வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக அறந்தாங்கி வனத்துறை வனவர் ஷபீர் அகமதுவிடம் மண்புழு மற்றும் 12 பேரை ஒப்படைத்தனர். இவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details