தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் மீது லாரி கவிழ்ந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு - car accident in pudukottai

புதுக்கோட்டை: வடகாட்டுப்பட்டி பிரிவு சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் கார் மீது லாரி கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர்.

car-accident-three-killed-in-pudukottai
car-accident-three-killed-in-pudukottai

By

Published : Jul 12, 2020, 5:19 PM IST

Updated : Jul 12, 2020, 7:16 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை கொடும்பாளூர் சத்திரத்தைச் சேர்ந்தவர் மிதுன்கிஷோர்(23). அவரும் அவருடைய நண்பர்களுமான அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த்(23), பரத்(23) மூவரும் காரில், சத்திரத்திலிருந்து விராலிமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

வடகாட்டுப்பட்டி பிரிவு சாலை அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது மோதிக் கவிழ்ந்தது. அப்போது திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி கார் மீது மோதி, அதன் மீது கவிழ்ந்தது.

அதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அந்த விபத்தில் காரிலிருந்த மூவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், துணைக் காவல் கண்காணிப்பாளர் அருள்மொழி அரசு ஆகியோர் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:டிராக்டர் மீது லாரி மோதி விபத்து - லாரி ஓட்டுநர் உயிரிழப்பு!

Last Updated : Jul 12, 2020, 7:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details