திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அக்பர் என்பவரை திருச்சியை சேர்ந்த பத்து பேர் கொண்ட கும்பல் கடத்தி புதுக்கோட்டை-திருச்சி மாவட்ட எல்லையான செங்கலாக்குடி கிராமத்திற்கு கொண்டுவந்துள்ளது. அங்கு, அவரை கட்டிவைத்து அந்த கும்பல் தாக்கியதில் அக்பர் உயிரிழந்துவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மண்டையூர் காவல்துறையினர், அக்பரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலைத் தேடிவருகின்றனர்.