புதுக்கோட்டையில் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், "நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கேட்ட பல்வேறு இடங்கள் கிடைக்கவில்லை. அதனால், ஏற்பட்ட பிரச்னைகளால் திமுக, காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். தற்போது, திமுக தலைவர் ஸ்டாலினால் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணி வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.
பாஜகவுடன் சேர்ந்து அதிமுகவும் மூழ்கப் போகிறது - திருநாவுக்கரசர் சாடல் - திமுக -காங்கிரஸ் கூட்டணி பிரச்னை விவகாரம்
புதுக்கோட்டை: பாஜக மூழ்கும் படகு, அதில் ஏறி பயணம் செய்துவரும் அதிமுக, பாஜகவுடன் சேர்ந்து அடுத்த தேர்தலில் மூழ்கப் போகிறது என்று காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
திமுக-காங்கிரஸ் பிரச்சனை குறித்து கருத்து கூறும் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக பாஜகவுடன் ஒட்டிக்கொண்டு உள்ளதா? அல்லது உடைந்துவிட்டதா? என்பதைக் கூற வேண்டும். பாஜக மூழ்கும் படகு, அதில் ஏறி பயணம் செய்யும் அதிமுக, அடுத்த தேர்தலில் மூழ்கப் போகிறது. அதை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதை ஜெயக்குமார் யோசிக்கட்டும்" எனக் காட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், ரஜினி குறித்த கேள்விக்கு, துக்ளக் விழாவில் ரஜினி கூறிய கருத்து என்னை பொறுத்தவரை விமர்சனம் செய்யும்படியாக இல்லை அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றார்.