புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா தாக்கம் அதிகரித்துவருகிறது. தற்போது கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,299ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வணிகர்கள் இன்று (ஜூலை24 ) முதல் 30ஆம் தேதிவரை கடையடைப்பு செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதேபோல இன்று புதுக்கோட்டையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள், மளிகைக் கடைகள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள், வங்கிகள், மதுபானக் கடைகள் போன்றவை வழக்கம்போல இயங்குகின்றன.