புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரத்தின் மையப்பகுதியில் உள்ளது தட்சிணாமூர்த்தி காய்கறி அங்காடி. இங்கு சுமார் 500க்கும் அதிகமான காய்கறி கடைகள் உள்ளன. இங்கு மாப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும காய்கறி கடை நடத்தி வருகிறார். இன்று அவர் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது, கடையின் உள்ளே ஒரு பொருளை எடுப்பதற்காக சென்றுள்ளார். அதனைத் தேடும்போது, எதிர்பாராத விதமாக, 'எர்த்' வயரை ராஜேந்திரன் கையில் பிடித்துள்ளார். இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து, நகர காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில், காய்கறி மார்கெட் சென்ற காவல் துறையினர், ராஜேந்திரனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.