இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் நவீன ரத்தப் பரிசோதனை மையம் அமைக்கப்படும்.
குறுஞ்செய்தி மூலம் ரத்தப் பரிசோதனை முடிவுகள் - அமைச்சர் விஜயபாஸ்கர் - blood test centres
புதுக்கோட்டை: தமிழ்நாடு முழுவதும் ரூ.287 கோடி மதிப்பில், அரசு மருத்துவனைகளில் நவீன ரத்தப் பரிசோதனை மையங்கள் விரைவில் துவங்கப்படும் என, அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.

அதில் பொதுமக்களுக்கு இலவசமாக அனைத்து சிகிச்சைகளும் செய்யப்பட்டு, அதன் மூலம் கண்டறிப்படும் நோய்கள் குறித்து, சம்பந்தப்பட்டவருக்கு செல்போனில் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். இந்த திட்டதிற்கு தமிழ்நாடு அரசு ரூ.287 கோடி பணம் ஒதுக்கியுள்ளது.
திருவள்ளூர், திருத்தணி போன்ற இடங்களில் இந்த திட்டம் தொடர்பாக சோதனை ஓட்டம் நடைப்பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவனைக்கு விரைவில் கொண்டுவரப்படும். இந்த திட்டமானது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக துவங்கப்பட உள்ளது" என தெரிவித்தார்.