புதுக்கோட்டை: தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை நகர திமுக இளைஞரணி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான மிஸ்டர் புதுக்கோட்டை - 2023 ஆணழகன் போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற இந்த போட்டியில், மொத்தம் 10 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. மேலும் மிஸ்டர் புதுக்கோட்டை - 2023 பட்டத்தை, திருவப்பூரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற இளைஞர் வென்றார்.