தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அன்னவாசல் அருகே மயில்களை வேட்டையாடிய மூவர் கைது! - peocock hunting

புதுக்கோட்டை : மயில்களை வேட்டையாடி பிடித்த மூன்று பேரை காவலர்கள் அன்னவாசல் அருகேயுள்ள வயலோகம் பகுதியில் கைது செய்தனர்.

புதுக்கோட்டையில் மயில்கள் வேட்டை  அன்னவாசல் மயில் வேட்டை மூவர் கைது  peocock hunting  three were arrested for peocock hunting in annavasal
அன்னவாசல் அருகே மயில்களை வேட்டையாடிய மூவர் கைது

By

Published : Jan 13, 2020, 4:33 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள வயலோகம் பகுதியில் காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கரவாகனத்தில் வந்த மூன்றுபேரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்கள் வைத்திருந்த சாக்குப்பையில் நாட்டுத்துப்பாக்கி ஒன்றும், ரோமம் பிடுங்கப்பட்டு இறந்த நிலையில் மூன்று மயில்களும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதன்பின்பு அந்த மூன்று பேரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள நகரப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம்(26), பெருமாள்(25), மூர்த்தி(26) என்பது தெரிய வந்தது.

அதன்பின் மூன்று பேரையும் கைதுசெய்த காவலர்கள், மயில் வேட்டைக்குப் பயன்படுத்திய ஒரு நாட்டுத்துப்பாக்கி, கைப்பேசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மயில்களை உணவுக்காக வேட்டையாடினார்களா அல்லது ஏதேனும் மருத்துவத்திற்காக வேட்டையாடினார்களா என்பது குறித்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அறந்தாங்கி அருகே பழங்காலத்து ஓலைச்சுவடிகள் கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details