புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடைகள் சில திறந்திருப்பதாக வருவாய் கோட்டாட்சியர் டெய்சி குமாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட மூன்று கடைகளுக்கு சீல்! - கரோனா ஊரடங்கு
புதுக்கோட்டை: ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட மூன்று கடைகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார்.
![ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட மூன்று கடைகளுக்கு சீல்! ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட மூன்று கடைகளுக்கு சீல்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11:59:44:1621578584-tn-pdk-02-shops-sealed-visual-scr-7204435-20052021115102-2005f-1621491662-294.jpg)
இதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நகராட்சி அலுவலர்கள், காவல் துறையினர் ஆகியோர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில், புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு பிரபல இனிப்புக் கடை திறக்கப்பட்டு, அதில் 30க்கும் மேற்பட்டோர் இருந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த கடைக்கு வருவாய்த் துறை அலுவலர்கள் சீல் வைத்தனர். மேலும், தனியார் பில்டிங் மெட்டீரியல் கடை திறக்கப்பட்டிருந்தது. அதனையும் வருவாய்த் துறை அலுவலர்கள் சீல் வைத்து மூன்று கடைகளுக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.