தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் விதிகளை மீறி திறந்த மூன்று கடைகளுக்குச் சீல்! - கரோனா ஊரடங்கு

புதுக்கோட்டை: ஊரடங்கு உத்தரவை மீறி கடைகளைத் திறந்து வியாபாரம் செய்த மூன்று கடைகளுக்கு கோட்டாட்சியர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.

விதிகளை மீறி திறந்த மூன்று கடைகளுக்கு சீல்!
விதிகளை மீறி திறந்த மூன்று கடைகளுக்கு சீல்!

By

Published : May 20, 2021, 7:16 PM IST

புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோயில் கடைவீதிப் பகுதியில் பாத்திரக் கடை, ஜவுளிக்கடை ஆகிய இரண்டு கடைகளும் ஊரடங்கு விதிகளை மீறி இயங்குவதாக மாநகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற கோட்டாட்சியர் டெய்சி குமார், வட்டாட்சியர் முருகப்பன், காவல் துறையினர் உள்ளிட்ட அலுவலர்கள் இரண்டு கடைகளுக்கும் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

அதேபோல் வீட்டிற்குள்ளேயே செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்துவந்த ஒரு கடையையும் அலுவலர்கள் பூட்டி, சீல் வைத்து அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

தொடர்ந்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபடி முழு ஊரடங்கினை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும்; இது போன்று கடைகள் திறந்து விற்பனை செய்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோட்டாட்சியர் டெய்சி குமார் எச்சரித்தார்.

ABOUT THE AUTHOR

...view details