புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே உள்ள பாத்தம்பட்டி முக்கம் பகுதியைச் சேர்ந்தவர், கோவிந்தன். இவரது வீட்டில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வீட்டின் இரண்டாவது தளத்தில், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள கோவிந்தன் மற்றும் கூலித் தொழிலாளர்கள் மாயழகு, முருகன் ஆகியோர் அலுமினிய ஏணி மூலம் ஏறியுள்ளனர்.
அப்போது, இரண்டாவது தளத்தையொட்டி சென்ற மின்கம்பி, எதிர்பாராத விதமாக ஏணி மீது உரசியது. இதில் ஏணியில் மின்சாரம் பாய்ந்ததால் கோவிந்தன் உள்ளிட்ட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.