புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் ஆன்லைன் லாட்டரி விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நகர காவல்நிலைய காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு ராஜ வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். விசாரணையில், அரசால் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.