புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே புதுக்குடியில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.
கார் விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு - புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள புதுக்குடியில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். காயமுற்ற 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 7 பேர் படகு வாங்க பட்டுக்கோட்டைக்கு ஒரு காரில் சென்றனர். பின்னர் அவர்கள் காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியே இராமநாதபுரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
புதுக்குடி அருகே வந்த போது எதிரே வந்த லாரி கார் மீது மோதியது. இதில் காரில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காயமடைந்த 4 பேர் மணமேல்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் 3 பேரும் தங்கச்சிமடத்தை சேர்ந்தவர்கள், மீன் பிடி தொழில் செய்து வந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மணமேல்குடி காவல் உதவி ஆய்வாளர் பரதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.