புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள வாதிரிப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி(50). இவர், மதுரையில் உணவகத்தில் தொழிலாளியாக வேலை செய்துவந்தவர். இவரது மனைவி வாதிரிபட்டியில் கூலி வேலை செய்துவந்தார். இவர்களுக்கு சுவேதா(15), மதுமிதா(9), அபிதா(9) என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில், திருமயம் அருகேயுள்ள அரண்மனைப்பட்டியில் தங்களது உறவினர் வீட்டுக்கு தூக்கம் விசாரிக்கச் சென்ற பழனிசாமி(50), மல்லிகா தம்பதியினர் மீது கார்மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த துயரச்சம்பவத்தால், வாதிரிப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது.