உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கோவிட்-19 வைரஸால் இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த கோவிட்-19 வைரஸால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 250ஐ தாண்டியுள்ளது. இதனிடையே, வேகமாகப் பரவிவரும் இந்த வைரஸிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க நாளை காலை ஏழு மணி முதல் இரவு ஒன்பது மணிவரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
மக்கள் ஊரடங்கு உத்தரவு எதிரொலி: மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம் - Covid 19 news
புதுக்கோட்டை: கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாளை மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், புதுக்கோட்டை மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில், இந்த மக்கள் ஊரடங்கு உத்தரவு நாளை மட்டுமல்லாமல் தொடர்ந்து நீடிக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வருகின்றனர். குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உழவர் சந்தையில் காலை 6 மணி முதல் இதுவரை ஆயிரக்கணக்கானோர் காய்கறிகள் வாங்குவதற்காக குவிந்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதையும் படிங்க:பட்டுக்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க முடியுமா? - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதில்