புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம். அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு வங்கி அதிகாரிகளோடு மத்திய அரசு மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் மூலமாக என்னென்ன கடன்கள்? எவ்வளவு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், "ஜெயலலிதா தான் தனக்கு நன்றி கடன்பட்டவர் என்றும் ஜெயலலிதாவிற்கு தான் நல்லது செய்தபோதும் அவர் தனக்கு கெடுதல் தான் செய்தார் என்றும் தெரிவித்தார். மேலும் அவர், ஜெயக்குமார் யார்? அவர் எப்போது அதிமுகவிற்கு வந்தார், அவர் எங்கெல்லாம் இருந்தார் என்பன உள்ளிட்டவைகள் தனக்கு தெரியாது என்றார்.
தற்போதைய விவாதம், ஜெயலலிதா பிரச்னை குறித்தும் தனக்கும் தான் என்று கூறிய அவர், இதில் தேவையில்லாமல் ஜெயக்குமார் போன்றவர்கள் ஏன் என்னை பற்றி கருத்து சொல்கின்றனர்? என்றும் கேள்வி எழுப்பினார்.
தேவையற்ற விவாதத்தை துண்டிவிடுவதா?:அதிமுகவில் தான் உண்டதே கிடையாது என்றும், அப்படியிருக்கையில் எப்படி உண்டக வீட்டுக்கு துரோகம் செய்ய முடியும் என்றார். மேலும், ஜெயலலிதா தான் தன்னிடம் உண்டுள்ளார் என்றும். 35 ஆண்டுகளுக்கு முன் தான் பேசியதாக சில பத்தரிக்கை ஆதாரங்களை சிலர் காட்டினால் அதற்கு வழக்கு வேண்டுமெனால் போட சொல்லுங்கள் என்றும் அவர் கூறினார்.
தன்னைப் பொறுத்தவரையில், இந்த தேவையில்லாத விவாதத்தை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இந்த பிரச்சினையின் போது, நிர்மலா சீதாராமன் வெளிநாட்டில் இருந்ததாகவும் அவர் கூறினார். நீட் தேர்வு விவாகரத்தில் (NEET Exam) தமிழகம் மட்டும் விலக்கு கேட்கும் நிலையில், பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொண்டதால் மத்திய அரசு ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாத சூழலில் உள்ளதாக கூறினார்.