திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு திருமயம் தாமரை கண்மாய் திடலில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் திருமயம், அரிமளம், அறந்தாங்கி, திருப்பத்தூர், சிவகங்கை, மேலூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கீழசீவல்பட்டி, பொன்னமராவதி, விராச்சிலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.
மஞ்சுவிரட்டுக்கென தனித்துவமாக அமைக்கப்பட்டிருந்த திடலில் முதலில் உள்ளூர் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து வெளியூர்களிலிருந்து வந்திருந்த காளைகளை உரிமையாளர்கள் ஒவ்வொன்றாக கண்மாய் பகுதியில் ஆங்காங்கே அவிழ்த்துவிட்டனர்.