தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமயம் பைரவர் கோயிலில் உண்டியல் உடைப்பு - போலீஸ் விசாரணை - பைரவர் கோயில் உண்டியல் உடைப்பு

திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் இருந்த உண்டியலை உடைத்து பல லட்சம் ரூபாயை திருடிச் சென்ற கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 6, 2023, 9:46 PM IST

கோயில் உண்டியலில் பணம் திருட்டு

புதுக்கோட்டை: திருமயம் ஊமையன்கோட்டையில் பிரசித்திப்பெற்ற கோட்டை பைரவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். தேய்பிறை அஷ்டமி என்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் வருகை தந்து கோலாகலமாக பூசணிக்காயில் தீபம் ஏற்றியும், அன்னதானம் வழங்கியும் உண்டியலில் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

திடீரென நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள், உண்டியலை உடைத்து அதிலுள்ள பணத்தை எடுத்துச் சென்றனர். இன்று காலையில் வழக்கம் போல் பூஜை செய்ய வந்த, கோயில் அர்ச்சகர் உண்டியல் உடைக்கப்பட்டு சில்லறைகள் சிதறி உள்ளதைக் கண்டு அதிர்ந்து போனார்.

இதனைத்தொடர்ந்து கோயில் அர்ச்சகர் திருமயம் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்ததன் பேரில் காவல் துறையினர் விரைந்து வந்து உடைக்கப்பட்ட உண்டியலை தடுப்புகள் வைத்து, யாரும் உள்ளே செல்லாமல் தடுத்துள்ளனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரும் வரை கோயிலுக்கு எந்தவித அபிஷேக ஆராதனையும் நடத்தக்கூடாது என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம்

ABOUT THE AUTHOR

...view details