தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமயம் வாகன விபத்து: கவிஞர் சினேகன் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை: திருமயத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் பாடலாசிரியர் சினேகன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

accident
accident

By

Published : Nov 17, 2020, 12:55 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் ஊனையூர் அருகே ஆலமரத்துக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருண்பாண்டி(28). இவர் நவம்பர் 15ஆம் தேதி இரவு சவேரியார்புரத்தில் இருந்து திருமயத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

அப்போது, கொசப்பட்டி கண்மாய் பகுதியில் வந்தபோது, இவரது இருசக்கர வாகனத்தின் மீது எதிரே கவிஞரும், மக்கள் நீதி மய்ய இளைஞரணி செயலாளருமான சினேகன் ஓட்டி சென்ற கார் மோதியது.

இதில், காயம் அடைந்த அருண்பாண்டி சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து திருமயம் காவல் துறையினர் சினேகன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details