தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுக மலை; பாஜக மடு...' - வைகோ சடுகுடு! - திமுக மலை பாஜக மடு

”திமுகவின் ஓராண்டு ஆட்சியும், பாஜகவின் 8 ஆண்டுகள் ஆட்சியும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக உள்ளது. இதில் திமுக ஆட்சி மலை என்றால், பாஜக ஆட்சி மடுவாக உள்ளது” என வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக மலை பாஜக மடு... வைகோ சடுகுடு !
திமுக மலை பாஜக மடு... வைகோ சடுகுடு !

By

Published : Jun 7, 2022, 6:19 PM IST

திருச்சி:புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சேதுமாதவன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், 'மதிமுக தொண்டர்கள் சிறு சலனத்துக்குக் கூட இடமளிக்காமல் அமைதியாக உள்ளனர். இயக்கத்துக்கு சோதனை வரும்பொழுது, எழுச்சி தானாக வந்துவிடும். மதிமுக உணர்வுகள், கொள்கைகள், லட்சியங்கள் அடிப்படையில் உருவான இயக்கம் என்பதால், அந்த உணர்வு மங்காமல் உறுதியாக உள்ளனர். ஆளுங்கட்சி மக்கள் செல்வாக்கோடும் பேராதரவோடும் இருப்பதால், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளே இருப்பதுபோல் தெரியவில்லை.

திராவிடக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் சமரசம் செய்து கொள்வதில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அனைவரும் உறுதியாக உள்ளனர். திமுகவின் ஓராண்டு ஆட்சியும், பாஜகவின் 8 ஆண்டுகள் ஆட்சியும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக உள்ளது. இதில் திமுக ஆட்சி மலை என்றால் பாஜக ஆட்சி மடுவாக உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வேலை குற்றச்சாட்டு சொல்வது. அதை அவர் செய்து கொண்டிருக்கிறார்’ என்றார்.

திமுக மலை பாஜக மடு... வைகோ சடுகுடு !

இதையும் படிங்க:ஆதீனம் விவகாரத்தில் அரசியல் செய்பவர்கள் அரசியல் செய்யட்டும் - வைகோ

ABOUT THE AUTHOR

...view details