சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நாளை (செப்.1) முதல் அரசு, தனியார் பேருந்து போக்குவரத்து இயக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு விதித்துள்ள முதல்நிலை கட்டுப்பாடுகளை ஓட்டுநர், நடத்துநர் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பேருந்துகளில் அதிகபட்சமாக 50 விழுக்காட்டினர் அனுமதிக்கப்பட வேண்டும்.
பயணிகள் இருக்கை, நிற்பதற்குத் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். பயணிகள் ஏறுவதற்குப் பின்புற வழியையும், இறங்குவதற்கு முன்புற வழியையும் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த நான்கு மாதங்களாகப் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசு, தனியார் பேருந்துகள் நாளை காலை முதல் இயங்கவுள்ளது.
கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம் இந்நிலையில் புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் உள்ள 383 பேருந்துகள் இயக்கத் தயாராகிவருகின்றது. கிருமிநாசினி, முகக்கவசம் போன்ற தொற்று பரவாமல் தடுக்கும் சாதனங்களுடன் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மட்டுமின்றி பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:பிரணாப் என்ற பீனிக்ஸ் பறவை