புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் கிராமத்தை சேர்ந்தவர் நாகலிங்கம் (28). இவர் தனது நண்பர்களுடன் நேற்று மதியம் மது அருந்திவிட்டு, அப்பகுதியில் உள்ள கூத்தையா குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நாகலிங்கம் நீண்ட நேரமாகியும் கரை திரும்பாததால், சந்தேகமடைந்த நண்பர்கள் குளத்தில் இறங்கி தேடியுள்ளனர். நீண்ட நேரம் தேடியும் அவர் கிடக்காததால் பதற்ற மடைந்த நண்பர்கள், உடனடியாக அறந்தாங்கி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகலிங்கத்தை தேடினர். அப்போது குளத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் நாகலிங்கத்தின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். நண்பர்களுடன் மது அருந்திவிட்டு மது போதையில் குளத்தில் குளிக்க சென்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயரிழந்த சம்பவம் கூத்தாடிவயல் கிராமத்தில் பெரும் சோகத்தை எற்படுத்தியது.