தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மத்திய அரசிடம் மாநில அரசு அடிமையாக செயல்படுகிறது' - ஜோதிமணி - புதுக்கோட்டை மாவட்டச் செய்திகள்

புதுக்கோட்டை: மாநில அரசு, மத்திய அரசிற்கு அடிமை அரசாக செயல்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேட்டியளித்துள்ளார்.

pudhukottai
pudhukottai

By

Published : Jan 29, 2020, 6:20 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, "விராலிமலை தொகுதியில் பாலம், நூறு நாள் வேலை உறுதித்திட்டம், பிரதமரின் சாலைத் திட்டம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிவருகிறோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி

சித்தன்னவாசல் கொடும்பாளூர் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பாதுகாக்கும் வகையில் இரண்டரை கோடி மதிப்பில் பராமரிப்புப் பணிகள் விரைவில் தொடங்கவிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், மத்திய அரசு புதிதாக ஒரு திட்டத்தை அறிவித்தால், அது குறித்து மாநில அரசு கேள்வி எழுப்பgவதில்லை, மத்திய அரசிடம் மாநில அரசு அடிமை அரசாகத்தான் செயல்படுவதாகச் சாடினார்.

இதையும் படிங்க: புதுக்கோட்டை தொகுதி பறிபோனது - எம்பி திருநாவுக்கரசர்

ABOUT THE AUTHOR

...view details