தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுமதியின்றி மணல் அள்ளிய ஒரு டிராக்டர் உள்பட 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் - சட்டவிரோதமாக மணல் அள்ளிய வண்டிகள் பறிமுதல்

புதுக்கோட்டை: அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோவில் பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

pudukkottai
pudukkottai

By

Published : Apr 14, 2020, 3:25 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் காவல் துறையினருக்கு வெள்ளாற்று பகுதியில் மணல் அள்ளப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், ஆவுடையார் கோவில் காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுந்தர் என்பவரது டிராக்டர் ஒன்றும், புண்ணியவயல் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, பாஸ்கரன், இளையராஜா, ஆத்மநாதன் சுப்பையா என்பவர்களுடைய ஐந்து மாட்டு வண்டிகளும் அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆவுடையார்கோவில் காவல் உதவி ஆய்வாளர் ராமராஜன், தனிப்பிரிவு காவலர் பாலசுப்ரமணியன் ஆகியோர் அனுமதியின்றி மணல் அள்ளிய வண்டிகளைப் பறிமுதல் செய்தனர். காவலர்கள் வருவதையறிந்த மாட்டு வண்டிக்காரர்கள் தப்பியோடினர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆவுடையார் கோவில் காவல் துறையினர், தப்பியோடியவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:மதுரையில் ஒரு மருத்துவர், இரு செவிலியருக்கு கரோனா தொற்று

ABOUT THE AUTHOR

...view details