புதுக்கோட்டை:கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 740- மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் கட்டடம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகவும் தற்போது விரிசல்கள் ஏற்பட்டு சிதிலமடைந்த நிலையிலும் காணப்படுகிறது.
தற்பொழுது பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக பள்ளியின் மேற்கூரையில் உள்ள சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. கடந்த திங்களன்று காலையில் பள்ளி திறக்கும்பொழுது பள்ளியின் மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது தெரியவந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்த வகுப்பறைக்கு அழைத்துச்செல்லாமல் மாணவர்களை மாற்று வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பள்ளியின் கட்டடம் முழுவதும் சிதிலமடைந்து காணப்படுவதால் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும்; கல்வியில் முக்கியத்துவம் கொடுக்கும் முதலமைச்சர் கல்வி கற்க வரும் மாணவர்களின் உயிர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியத்தில் மட்டும் நான்கு இடங்களில் அரசுப் பள்ளியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும்; கல்வித்துறை சார்பில் தனிக்குழு அமைத்து அரசுப் பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும்; தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு புதிய கட்டடம் அமைத்துத் தருமாறும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மேல்நிலைப் பள்ளியில் இடிந்து விழுந்த மேற்கூரை இதையும் படிங்க:கண்மாய் மடைகளில் கசியும் நீர்... சரி செய்யக்கோரி சிறுவன் வெளியிட்ட வீடியோ