தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோழியை விழுங்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு! - The python was caught in Pudukkottai

புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே கோழியை விழுங்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்த பொதுமக்கள், அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோழியை விழுங்கி 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்த பொதுமக்கள்
கோழியை விழுங்கி 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்த பொதுமக்கள்

By

Published : Dec 11, 2019, 8:53 AM IST


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் உள்ள காதரப்பா வீதி குடியிருப்பு பகுதியில் முகமது ரபீக் என்பவர் வீட்டுக்கு பின்புறம் கோழி கத்தும் சத்தம் கேட்டுள்ளது. அப்பொழுது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அங்கு சென்று பார்த்தபோது மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கி கொண்டிருந்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அந்த பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் யாருக்கும் பிடிகொடுக்காமல் பாம்பு போக்கு காட்டியது. இதையடுத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு மலைப்பாம்பு பிடிபட்டது. பின்னர் அந்த பாம்பை பிடித்த இளைஞர்கள் ஒரு சாக்கு பையில் அடைத்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

கோழியை விழுங்கி 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்த பொதுமக்கள்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை காப்பாளர் ஆத்மநாதனிடம் மலைப்பாம்பு ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த மலைபாம்பு நார்த்தாமலை வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

இதையும் படிங்க: மீன்பிடி வலையில் சிக்கி 12 அடி நீளமுள்ள 4 மலைப் பாம்புகள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details