புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கீழையூரைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. ஊரில் நடந்த அடிதடி பிரச்னையில் காயம் அடைந்ததன் காரணமாக இவர் அறந்தாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பெற்று வந்த இவர், திடீரென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டோவை வைத்து விளக்கேற்றி மந்திரம் சொன்னதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த வார்டில் இருந்த நோயாளிகள் மத்தியில் அவரின் செயல் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று அவர் வேப்பிலை, இளநீர் போன்ற மந்திரத்திற்கு தேவையான அனைத்துப் பொருள்களையும் வைத்து பூஜை செய்து கொண்டிருந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற நோயாளிகள், அவற்றை எடுக்குமாறு கூறியுள்ளனர்.