புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அக்கினி பஜாரை சேர்ந்த சரவணன் என்பவருக்கு, சாலை விபத்து தொடர்பாக சம்மன் வழங்க காவலர் ராமராஜன் என்பவர் சென்றுள்ளார்.
அப்போது காவலர் ராமராஜனை கடைவீதியில் காத்திருக்கும்படி சரவணன் கூறியுள்ளார். பின்னர் அங்கு சென்ற சரவணனின் நண்பர் துரைராஜ் என்பவர், வீட்டிற்கு வரக் கூடாது எனக்கூறி காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.