புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த மேல்மங்கலம் பஞ்சாயத்துக்குள்பட்ட பகுதியில் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இந்தக் கிராமத்தில் 2002-2003ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி உள்ளது.
ஆனால், தண்ணீர் தொட்டியில் நீரை நிரப்பி தகுந்த நேரத்தில் கிராமத்து மக்களுக்கு வழங்குவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, "மக்கள் பலமுறை கூறியும் ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, இந்தத் தண்ணீர் தொட்டியின் மீது ஏறும் ஏணியானது துருப்பிடித்துக் கீழே விழும் நிலையில் உள்ளதால், தொட்டியைக் கழுவ முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, அத்தண்ணீரையே நாங்கள் பயன்படுத்திவருகிறோம்.