புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கடையாத்துபட்டியைச் சேர்ந்தவர் சாத்தாயி(45). இவரது மகன் மணிகண்டன்(18), அறந்தாங்கியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், 100 குழி நிலத்துக்கு பதிவு செய்யுமாறு மணிகண்டனிடம் சாத்தாயி கூறினார்.
இன்சூரன்ஸ் பதிவு செய்ய சொன்னதை மகன் கேட்காததால் தாய் தற்கொலை - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி
புதுக்கோட்டை: அறந்தாங்கி அடுத்த கடையாத்துபட்டியில் இன்சூரன்ஸ் பதிவு செய்ய சொன்னதை மகன் கேட்காததால் மனமுடைந்த தாய், தீ குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஆனால், தனக்கு ஆன்லைன் வகுப்பு இருப்பதால் இன்சூரன்ஸ் வேலையை பிறகு செய்கிறேன் என்று மணிகண்டன் கூறினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டத்தை அடுத்து, சாத்தாயி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து, அவரை காப்பாற்ற முயன்ற மணிகண்டனின் உடலிலும் தீ பற்றிக் கொண்டது.
அதன் பிறகு, சம்பவ இடத்திலேயே சாத்தாயி உயிரிழந்த நிலையில், மணிகண்டனை மீட்ட அக்கம் பக்கத்தினர், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.