தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வறுமையால் வெளிநாடு சென்றவர்... கரோனாவால் உயிரிழப்பு! - Pudukkottai District News

புதுக்கோட்டை: கடன் பிரச்னை தாங்க முடியாமலும், குடும்பத்தில் வறுமை தலை விரித்தாடியதாலும் வருமானம் ஈட்ட வெளிநாட்டிற்குச் சென்றவர் கரோனா வைரஸ் பாதிப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.

.கரோனா பாதிப்பால் உயிரிழந்த கனிக்குமார்
.கரோனா பாதிப்பால் உயிரிழந்த கனிக்குமார்

By

Published : May 31, 2020, 3:44 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஆண்டிகுளப்பன் பட்டியைச் சேர்ந்தவர் கனிக்குமார்(44). இவர் தனது சொந்த ஊரில் விவசாய வேலை செய்துவந்தார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், ராஜேஷ்குமார், புகழ்மாறன் என்ற மகன்களும் கனிமொழி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் குடும்பத்தை காப்பாற்ற கனிக்குமார் கடன் வாங்கினார். இந்தக் கடனை அடைக்க முடியாததாலும், வீட்டில் வறுமை நிலவியதாலும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றார். அங்கு ஜித்தா என்ற பகுதியில் துறைமுகத்தில் பணியாற்றினார்.

இந்நிலையில் கடந்த தமிழ் வருடப்பிறப்பு அன்று கனிக்குமாருக்கு கரோனா வைரஸ் தாக்கியுள்ளதாகவும், அவரை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளதாகவும், அவர் பணிபுரியும் கம்பெனியிலிருந்து ஆண்டிகுளப்பன் பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு போன் மூலம் தகவல் வந்தது. அதன் பிறகு கனிக்குமார் தனது மனைவி, உறவினர்களுக்கு ஃபோன் தொடர்புகூட இல்லாமல் இருந்துள்ளார்.

இதனால் அவர் என்ன நிலையில் உள்ளார் என்பதே தெரியாமல் குடும்பத்தினர்கள் புலம்பி வந்தனர். இந்நிலையில் இன்று கனிக்குமார் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்துவிட்டதாக, ஃபோன் மூலம் கனிக்குமார் வீட்டிற்கு தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய், தந்தை மனைவி மக்கள், உறவினர்கள் கதறி அழுதனர்.

சவுதிக்கு வேலை சென்றவர் கரோனாவால் உயிரிழந்தார்

இதனைத்தொடர்ந்து சவுதி அரேபியாவிற்கு தொடர்புகொண்டு, அவரது உறவினர்கள் கனிக்குமாரின் உடலை கேட்டபோது, தற்போது விமான போக்குவரத்து இல்லாததாலும், கரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்ததாலும், அவரது உடலை இந்தியாவிற்கு அனுப்ப முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் வருமானம் ஈட்ட வெளிநாட்டிற்குச் சென்று உயிரிழந்த கனிக்குமாரின் முகத்தைக்கூட இறுதியில் பார்க்க முடியாமல் அவரது மனைவி, குழந்தைகள், உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் கனிக்குமாரின் குடும்பத்திற்கு அரசு உதவ முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:தென்னக ரயில்வே ஊழியர்கள் 70 பேருக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details