புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும், செங்கோட்டையில் யார் வன்முறையில் ஈடுபட்டிருந்தாலும் அது தவறுதான். பத்தாண்டு அதிமுக ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை, ஆட்சி மாற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். பெண்கள் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என முடிவெடுத்துவிட்டனர்.
திமுக ஆட்சியில் மக்களின் குறைகள் தொடர்ந்து தீர்க்கப்பட்டுவந்தன, வாக்குறுதிகளை நிறைவேற்றிவந்தோம். இந்தப் பத்தாண்டு ஆட்சியில் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அடிப்படைத் தேவைகளைக்கூட அரசு செய்துதரவில்லை, குடிமராமத்துப் பணிகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. வாக்காளர்களுக்கு பணம் அளிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று" என்றார்.