தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசின் திட்டமிடாத முடிவால் பிரச்னை அதிகம்: கார்த்திக் சிதம்பரம் - Providing Relief Assistance at Pudukkottai

புதுக்கோட்டை: அரசாங்கம் எடுக்கும் யோசனை இல்லாத முடிவுகளால் தான் பிரச்னை அதிகமாகிக்கொண்டே போகிறது என்று கார்த்திக் சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

கார்த்திக் சிதம்பரம்
கார்த்திக் சிதம்பரம்

By

Published : Jun 4, 2020, 3:40 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கரோனா நிவாரண உதவிகளை கார்த்திக் சிதம்பரம் வழங்கினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் கரோனா பாதிப்பின் தாக்கம் அதிகமாக காணப்பட்டாலும், பிற மாவட்டங்களில் சற்று குறைவாக இருந்தாலும் கூட இந்த கரோனா வைரஸானது மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. எனவே அரசானது கரோனா பரிசோதனைக்கான ஏற்பாடுகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்கும் நிலைமை எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. இயல்பு வாழ்க்கையை கட்டுப்படுத்தினால் பொருளாதாரம் பாதிக்கப்படும். அதனால் அரசு மக்களுக்கு தகுந்த நேரத்தில் நிவாரண தொகையை வழங்கியிருந்தால் பாதிப்பு குறைவாக இருந்திருக்கும். அதாவது அரசானது ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.7ஆயிரம் வழங்கி இருந்தால் தற்போது எந்த ஒரு பிரச்சனையும் இருந்திருக்காது. மேலும் இதனை காங்கிரஸ் கட்சியானது தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த அரசாங்கம் எடுக்கும் திட்டமிடாத முடிவுகளால் தான் பிரச்சனை அதிகமாகிக்கொண்டே போகிறது. இந்நிலையில், தற்போது மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அதற்கேற்றார்போல பாதுகாப்பு நடவடிக்கைகளையும், பரிசோதனை முறைகளையும் அதிகப்படுத்தினால் ஓரளவிற்கு வைரஸை கட்டுப்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு - சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை

ABOUT THE AUTHOR

...view details