தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பொதுமக்கள்தான் எனக்கு முதல் உளவுத்துறை' - first intelligence I have is the public

புதுக்கோட்டை: பொதுமக்கள் தான் தனக்கு முதல் உளவுத்துறை என்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தெரிவித்துள்ளார்.

arun sakthikumar
arun sakthikumar

By

Published : Jan 14, 2020, 10:51 PM IST

புதுக்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மண்டபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற பொன்னமராவதி, இலுப்பூர், கீரனூர் ஆகிய பகுதிகளில் ஊராட்சித் தலைவர், ஊராட்சி துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காவலன் ஆப் செயலி மூலம் எவ்வாறு தகவல் கொடுக்க வேண்டும், தங்கள் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சிசிடி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் அருண் சக்திகுமார் எடுத்துரைத்தார்.

'அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது'

காவலன் செயலி குறித்து விளக்கிய அருண் சக்திகுமார்
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், "பொதுமக்கள்தான் எனக்கு முதல் உளவுத்துறை. காரணம் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றங்களைத் தைரியமாக காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். எனவே உங்கள் பகுதிகளில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக காவல் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சித் தலைவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை நடத்தியது இதுவே முதல் முறையாகும்.

ABOUT THE AUTHOR

...view details