தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடற்புழு நீக்க மாத்திரையை குழந்தைகளுக்கு வழங்கிய ஆட்சியர் - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி

புதுக்கோட்டை: தேசிய குடற்புழு நீக்க மாத்திரையை குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி வழங்கினார்.

புதுக்கோட்டையில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரையை குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி வழங்கினார்
புதுக்கோட்டையில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரையை குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி வழங்கினார்

By

Published : Sep 15, 2020, 6:27 PM IST

தமிழ்நாடு முழுவதும் தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றுவருகிறது. இம்முகாமில் 1 முதல் 19 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மருந்து வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 4 லட்சத்து 55 ஆயிரத்து 683 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி மொத்த குடற்புழு பாதிப்பில் இந்தியா 25% பங்களிக்கிறது. கொக்கிப் புழு, நாடாப் புழு, உருண்டைப் புழு, சாட்டை புழு போன்றவை சுகாதாரமற்ற சுற்றுப்புறத்தின் மூலம் பரவுகிறது. அதிகமான தொற்று இருப்பின் வயிற்றுவலி, பசியின்மை, உடல் சோர்வு, இரத்த சோகை போன்ற அறிகுறிகள் தோன்றும்.

கழிவறையைப் பயன்படுத்துதல், சுற்றுப்புறத் தூய்மை, காய்கறி, பழங்களை நன்கு கழுவிய பின் உட்கொள்ளுதல், சுத்தமான குடிநீரைப் பயன்படுத்துதல், நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருத்தல், காலணிகளை அணிதல், உணவுக்கு முன்னும், கழிவறையைப் பயன்படுத்திய பின்னும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுதல் போன்றவற்றின் மூலம் குடற்புழு தொற்றினை தடுக்கலாம்.

மேலும் இதுபோன்ற குடற்புழு தொற்றினை தடுப்பதற்காக இரண்டு வயது முதல் பத்தொன்பது வயது வரை உள்ள குழந்தைகள், ஆண்கள், பெண்களுக்கு ஒரு மாத்திரை வழங்கப்படுகிறது. இந்த மாத்திரையை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details