நடந்துமுடிந்த மறைமுக தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டிய இடங்களில், அதிமுக வெற்றியடைந்தது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திமுகவின் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் ரகுபதி, திமுக ஒன்றிய பொறுப்பாளர் அழகு சிதம்பரம் ஆகியோரை குற்றம்சாட்டி திமுகவினர் ஒட்டப்பட்ட சுவரொட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
'அதிமுக வெற்றிக்கு உதவிய திமுக எம்எல்ஏ ரகுபதிக்கு கோடான கோடி நன்றி' - விளம்பர பதாகையில் உள்கட்சி பூசல்
புதுக்கோட்டை: திமுக தோல்விக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ரகுபதி, திமுக ஒன்றிய பொறுப்பாளர் அழகு சிதம்பரம் ஆகியோரே காரணம் என்று ஒட்டியுள்ள விளம்பரப் பதாகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தச் சுவரொட்டியில் இருவரது பெயரையும் குறிப்பிட்டு, ”வேண்டுமென்றே திமுகவின் வெற்றியை அதிமுகவிற்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டீர்கள். இதற்கு கோடான கோடி நன்றிகள்” என்ற வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளனர். இந்த விளம்பரப் பதாகையை பொது இடங்களில் ஆங்காங்கே ஒட்டியும் வைத்திருந்தனர். இந்தச் சம்பவம் குறித்து திமுகவினரிடம் கேட்டபோது யார் செய்தது என்று தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தை மட்டும் அதிமுக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.